
“ஈஷா யோகா என்பது மதமல்ல, தத்துவம் அல்ல, கோட்பாடு அல்ல. ஒருவரது உள்வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் அது. அதனை யாரும் நம்பவும் தேவையில்லை, நம்பாமல் இருக்கவும் தேவையில்லை, பயன்படுத்தத் தெரிந்தால் போதும். தொழில்நுட்பம், நீங்கள் யார் என்பதை பார்ப்பதில்லை, அனைவருக்கும் பயன்தரும்.”
ஈஷா யோகா பயிற்சி செய்து வருபவர்களிடம் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவில் முன்னேற்றம் கண்டவர்கள்




இந்நிகழ்ச்சியினால் கிடைக்கும் பலன்கள்
- மன அழுத்தமற்ற வாழ்வு
- மேம்பட்ட ஆரோக்கியம்
- செயல்பாட்டுத் திறனில் அபிவிருத்தி
- மன நிலையில் தெளிவு
- உறவுகளிடையே சுமூக நிலை
- உள்நிலை நலம்
- சுயமுன்னேற்றம்
ஈஷா யோகா வகுப்பில் சொல்லித் தரப்படும் சில அம்சங்களும், அதனுடன் ஷாம்பவி கிரியா பயிற்சியும் நமது ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலோட்டமாய் தெரியும் அறிகுறிகளை மட்டும் ஷாம்பவி கிரியா சீர் செய்யாமல், அந்த பிரச்சனைக்கான மூலத்தையே நிவர்த்தி செய்கிறது. இதன்மூலம், ஒருவருக்கு பரிபூரண நல்வாழ்வு சாத்தியமாகிறது.
அனுபவம்
“துக்கங்களை தொலைத்து ஆனந்தமாய் வாழ ஈஷா யோகா எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. வெறும் ‘வயிற்றுப் பிழைப்பிற்காக’ வாழாமல், நம் வாழ்க்கையை நமக்கு ‘வேண்டியபடி உருவாக்கிக் கொள்ள முடியும்’ என்று ஈஷா யோகா புரிய வைத்திருக்கிறது.”
திரு. சந்திரபாபு நாயுடு
மாண்புமிகு ஆந்திர முதல்வர்
மக்கள் எதையெல்லாம் வெற்றி என நினைப்பார்களோ, உடல் நலம், படிப்பு, வேலை, நல்ல குடும்பம், பொருளாதாரம் என எனக்கு எல்லாமே அமைந்திருந்தது. ஆனாலும், ஈஷா யோகா என் வாழ்க்கையைய மாற்றியது. மிகுந்த வேலைப் பளுவிற்கு மத்தியிலும், இடைவிடாமல் யோகப் பயிற்சிகள் செய்தேன். 3 மாதத்துக்குள்ளேயே எனக்குள் பல மாற்றங்கள். குறிப்பாக, சக்திநிலை, மனம் குவிப்பில் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
திரு. பாலமுருகன்
ஐ.ஏ.எஸ்
இந்த வகுப்பு முழுமையானதாக இருக்கிறது. மிக எளிமையாக, அருமையாக அனைவரையும் சென்றடையக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மிக எளிமையான விஷயங்கள்தான், ஆனால் அதை உணர்வதே வேற்றுலக அனுபவம்போல் ஒரு பரவசத்தில் நம்மை ஆழ்த்துகிறது. இந்த வகுப்பிற்குப் பின், 30 வருடங்கள் இளமையானதைப் போல உணர்கிறேன். நாட்டின்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மனிதர்கள், என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் இந்த வகுப்பை நான் நிச்சயம் பரிந்துரை செய்வேன்.
திருமதி. சுஹாசினி மணிரத்னம்
நடிகர்