யோகி, ஞானி, தொலைநோக்கு பார்வையாளர் என பன்முகம் கொண்ட சத்குரு அவர்கள், டிசம்பர் 17, 18 தேதிகளில், கோவை ஈஷா யோக மையத்தில் “சத்குருவுடன் ஈஷா யோகா” என்கிற யோக வகுப்பினை நடத்தவிருக்கிறார்கள். ஆன்மீக சூழல்நிறைந்த யோக மையத்தில், இந்த வகுப்பில் பங்கேற்பதன் மூலம், ஒரு மனிதருக்குள் அளப்பரிய பல சாத்தியங்கள் திறக்கின்றன. ஒரு ஞானமடைந்த குருவிடமிருந்து, ஆற்றல்வாய்ந்த யோகப் பயிற்சிக்கு தீட்சை பெறும் அரிய வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கிறது. சத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட புனிதமான ஆதியோகி ஆலயத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

ஆனந்தமான வாழ்க்கைக்கு

ஈஷா யோகா

உடலையும் மனதையும் பண்படுத்த பல ஆயிரம் ஆண்டுகளாக தொன்மையான யோக அறிவியலை நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம். யோகப் பயிற்சிகளை செய்து வருபவர்களே அது வழங்கும் அளப்பரிய பலன்களுக்கு சாட்சியாய் இருக்கின்றனர்.

யோகா என்றால் உடலை வளைப்பது, உடற்பயிற்சி என்று மக்கள் நினைத்தாலும், அது உடலை வளைப்பது மட்டுமல்ல, யோகா மிக உயர்ந்த ஒரு பரிமாணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. யோகா ஒரு மனிதருடைய உடல், மனம், உணர்வு, சக்தி என அவருடைய முழுமையான நல்வாழ்விற்கு வழிவகுக்கிறது.

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

QuotationMark

“ஈஷா யோகா என்பது மதமல்ல, தத்துவம் அல்ல, கோட்பாடு அல்ல. ஒருவரது உள்வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் அது. அதனை யாரும் நம்பவும் தேவையில்லை, நம்பாமல் இருக்கவும் தேவையில்லை, பயன்படுத்தத் தெரிந்தால் போதும். தொழில்நுட்பம், நீங்கள் யார் என்பதை பார்ப்பதில்லை, அனைவருக்கும் பயன்தரும்.”

சத்குரு

ஈஷா யோகா பயிற்சி செய்து வருபவர்களிடம் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவில் முன்னேற்றம் கண்டவர்கள்

ஈஷா யோகா வகுப்பில் சொல்லித் தரப்படும் சில அம்சங்களும், அதனுடன் ஷாம்பவி கிரியா பயிற்சியும் நமது ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலோட்டமாய் தெரியும் அறிகுறிகளை மட்டும் ஷாம்பவி கிரியா சீர் செய்யாமல், அந்த பிரச்சனைக்கான மூலத்தையே நிவர்த்தி செய்கிறது. இதன்மூலம், ஒருவருக்கு பரிபூரண நல்வாழ்வு சாத்தியமாகிறது.

அனுபவம்

“துக்கங்களை தொலைத்து ஆனந்தமாய் வாழ ஈஷா யோகா எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. வெறும் ‘வயிற்றுப் பிழைப்பிற்காக’ வாழாமல், நம் வாழ்க்கையை நமக்கு ‘வேண்டியபடி உருவாக்கிக் கொள்ள முடியும்’ என்று ஈஷா யோகா புரிய வைத்திருக்கிறது.”

திரு. சந்திரபாபு நாயுடு

மாண்புமிகு ஆந்திர முதல்வர்

மக்கள் எதையெல்லாம் வெற்றி என நினைப்பார்களோ, உடல் நலம், படிப்பு, வேலை, நல்ல குடும்பம், பொருளாதாரம் என எனக்கு எல்லாமே அமைந்திருந்தது. ஆனாலும், ஈஷா யோகா என் வாழ்க்கையைய மாற்றியது. மிகுந்த வேலைப் பளுவிற்கு மத்தியிலும், இடைவிடாமல் யோகப் பயிற்சிகள் செய்தேன். 3 மாதத்துக்குள்ளேயே எனக்குள் பல மாற்றங்கள். குறிப்பாக, சக்திநிலை, மனம் குவிப்பில் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

திரு. பாலமுருகன்

ஐ.ஏ.எஸ்

இந்த வகுப்பு முழுமையானதாக இருக்கிறது. மிக எளிமையாக, அருமையாக அனைவரையும் சென்றடையக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மிக எளிமையான விஷயங்கள்தான், ஆனால் அதை உணர்வதே வேற்றுலக அனுபவம்போல் ஒரு பரவசத்தில் நம்மை ஆழ்த்துகிறது. இந்த வகுப்பிற்குப் பின், 30 வருடங்கள் இளமையானதைப் போல உணர்கிறேன். நாட்டின்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மனிதர்கள், என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் இந்த வகுப்பை நான் நிச்சயம் பரிந்துரை செய்வேன்.

திருமதி. சுஹாசினி மணிரத்னம்

நடிகர்

ஆனந்த அலை

ஆசைப்படு அடைந்துவிடு

இந்த நூலில்…

சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதானே உங்களுடைய அத்தனை ஆசைகளுக்கும் அடியில் புதைந்திருக்கும் உண்மை? நீங்கள் கேட்டது கிடைத்துவிட்டது. ஆனால், திருப்தியில்லாமல் அடுத்தது, அடுத்தது என்று ஆசை தாவிக் கொண்டேயிருக்கிறது.

ஏன் இப்படி? எங்கே தவறு நிகழ்ந்தது?

இது உங்கள் குற்றமா அல்லது ஆசையின் குற்றமா?

எந்தப் பக்கத்தை எடுத்துப் புரட்டினாலும், அங்கே உங்களுக்கு ஒரு செய்தி இருக்கும், ஒரு விடை கிடைக்கும். இந்த நூல், மக்களுக்கான ஒரு அர்ப்பணிப்பாக உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. மதம், இனம் போன்ற எந்த வேறுபாடுமின்றி, ஒரு சொட்டு ஆன்மிகமாவது, அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த நூலில் பல கருவிகள் தரப்பட்டுள்ளன. அந்தக் கருவிகளை நீங்கள் பயன்படுத்துவதுடன் நீங்கள் அறிந்த ஒவ்வொருவரும் பயன்படுத்துமாறு நீங்கள் செய்ய வேண்டும். அன்பான, அமைதியான, ஆனந்தமான மனிதர்கள் உருவாவதுதான் இப்போதைய முக்கியத் தேவையாக இருக்கிறது.

இந்த நூல் உங்கள் வாழ்க்கையை மிகவும் மேம்படுத்தும். எனினும், இந்த உண்மைகளை உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் முழமையாக உணர ஈஷா யோகா வகுப்புகள் கூடுதல் வாய்ப்பாக இருக்கும்.

அற்புத வாழ்விற்கு அடித்தளம் அமைப்போம்!

வாருங்கள், உங்களில் மலருங்கள்!!

இணைந்திடுங்கள்

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?

சத்குருவுடன் ஈஷா யோகா

கற்றுக்கொள்ள வாருங்கள்!

© 2017 Sadhguru All rights reserved